எலக்ட்ரிக் கார்களிலேயே உலகின் முன்னோடியாக திகழ்வது டெஸ்லா கார்கள். உலகின் பல நாடுகளிலும் இந்த வகை எலக்ட்ரிக் கார்கள் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்குகிறது. பல நாடுகளிலும் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு வந்தாலும் இந்தியாவில் பல காரணங்களுக்காக டெஸ்லா அறிமுகப்படுத்தாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இறக்குமதி வரி அதிகம் இருப்பதால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை துவங்க இடையூறு ஏற்படுகிறது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய கனரக மற்றும் மின்துறை அமைச்சர், இறக்குமதி வரியை குறைக்க திட்டம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .டெஸ்லா கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதாக எலான் மஸ்க் கூறிய பின்னும் வரியை குறைக்க இந்திய அரசு முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.