சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களில் மாற்றம் ஏற்படும்.
புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் எண்ணங்கள் உண்டாகும். இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம் கிடைக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கை கோபத்தை ஏற்படுத்தும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பின்னர் சரியாகும்.
பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் காட்டுங்கள். தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கையுடன் இருங்கள். தாயாரிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். நல்ல விஷயங்கள் உண்டாகும். தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். செலவினை கட்டுப்படுத்துங்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.