Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டை பங்கு பிரிக்க வேண்டும்… குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு… இளைஞர் கைது…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறில் சித்தப்பாவை தாக்கிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடியில் உள்ள முனீஸ்வரன் கோவில் தெருவில் ராஜூ என்பவர் அவரது மனைவி கலாவதி, மகன் தெய்வேந்திரன்(22), மகள் கீதாஞ்சலி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே வீட்டில் மற்றொரு பகுதியில் ராஜூவின் தாய் ராசாத்தி மற்றும் தம்பி சேதுமணி(52) ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து ராஜூ கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் அவருக்கு சடங்குகள் செய்வதற்காக வீட்டில் வெள்ளை அடிக்க வேண்டும் என ராசாத்தி கூறியுள்ளார். அதற்கு ராஜூவின் மானைவி கலாவதி வீட்டை பங்கு பிரிக்காமல் வெள்ளையடிக்க கூடாது என தகராறு செய்துள்ளார்.

இதனால் கலாவதிக்கும் சேதுமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து ஆத்திரமடைந்த கலாவதி அவரது மகன் ஜெய்தேவேந்திரன் மற்றும் மகள் கீதாஞ்சலி சேர்ந்து சேதுமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த சேதுவை மீட்டு அக்கம்பக்கத்தினர் போடி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெய்வேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |