லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
Happy to announce 🤝#RAPO19 Audio on @adityamusic 🎼
A Rockstar @ThisIsDSP 🥁 Musical
Ustaad @ramsayz @AadhiOfficial @dirlingusamy @IamKrithiShetty @srinivasaaoffl @iAksharaGowda @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv#RAPO19AudioOnAdityaMusic pic.twitter.com/u91xipUO5G
— Srinivasaa Silver Screen (@SS_Screens) August 3, 2021
மேலும் இந்த படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.