Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 5 மணி வரை மட்டுமே…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் திருப்பூர் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |