Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இத தான் எதிர்பார்த்தோம்… தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் ஸ்பெஷல்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு சர்காரு வாரி பாட்டா படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் தற்போது சர்காரு வாரி பாட்டா படம் உருவாகி வருகிறது. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் ஜி.எம்.பி புரொடக்சன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஆகஸ்டு 9-ஆம் தேதி சர்காரு வாரி பாட்டா படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Categories

Tech |