சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்டு 22 ஆகிய தினங்களில் முழு ஊரடங்கு கிடையாது என கேரளா அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா 2-ம் அலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வராத காரணத்தினால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் திறக்கப்படாத நிலையில் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஓணம் பண்டிகை வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த ஓணம் பண்டிகைக்காக கடைகளைத் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள் இன்று இரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. நாளை முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்டு 22 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா அதிகமுள்ள பகுதிகளில் மும்மடங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.