Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுங்கள்”… பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்.!!

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுங்கள் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஐ.ஐ.டியின் அம்பத்துார் 56 -ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.ஐநா அவையில் உரையாற்றும்போது, செம்மொழித் தமிழின் உன்னதமான கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..” என்பதையும் சுட்டிக் காட்டினார்.

Image result for ஸ்டாலின்

பிரதமரின் இந்தச் சொற்கள் இங்குள்ள நம் எல்லோருக்கும் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லாம் மகிழ்ச்சியும் தரக் கூடியவை. “தமிழ்தான் உலகின் பழமையான மொழி” என்ற வரலாற்று உண்மையை பிரதமர் அவர்கள் ஏற்றுப் போற்றியிருப்பதை திமுக சார்பில் உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம். இந்நேரத்தில், 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்க வேண்டும் என பிரதமர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளர் . இது தொடர்பாக விரிவாக ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Image

Image

 

Categories

Tech |