இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ நிறுவனம் தனது 15-ம் ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடியது. இதனை முன்னிட்டு நேற்று முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி வரை தள்ளுபடி விலையில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களில் தள்ளுபடி கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. உள்நாட்டு விமானங்களுக்கு 915 ரூபாய் முதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு விமானங்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே விமான டிக்கெட் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் ஆகஸ்டு 6ஆம் தேதிக்குள் தள்ளுபடி விலையில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம். மேலும் HSBC கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு 750 ரூபாய் வரை ஸ்பெஷல் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது என அறிவித்துள்ளது.