பஞ்சாப் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் பல சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் கீழ் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அமேசான், ஸ்விக்கி போன்ற தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கினால் 20% தள்ளுபடி பெறலாம்.
அதுமட்டுமன்றி வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு 2 லட்சம் வரையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் https://www.rupay.co.in/our-cards/rupay-debit/rupay-platinum என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம். அதுமட்டுமன்றி வீடு வாங்குவதற்கு சிறப்பு சிறப்பு சலுகையையும் பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்குகிறது. அதன்படி ஆகஸ்ட் 12-ஆம் தேதி மிகப்பெரிய ஆன்லைன் ஏலத்தை பஞ்சாப் பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்குகிறது. அதில் வாடிக்கையாளர்கள் பங்குபெற்று சலுகை விலையில் வீடுகளை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.