இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் உடனடியாக 155260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்திற்கு நேரில் வராமலேயே cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.