பிரதமரின் பங்களா சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். இதனை அடுத்து அந்த நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமை என்று இரு பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறார். இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் நிதி தட்டுப்பாடு 1800 கோடி டாலராக உள்ளது. இந்த நிலையில் toyoto கார், power cement, nestle போன்ற நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மக்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். இதனால் இந்திய கண்டத்திலேயே அந்நாட்டின் ஒரு டாலரானது 150 ரூபாய் என்ற மதிப்பிற்கு குறைந்துள்ளது.
இந்த சூழ்நிலையை சமாளிக்க பாகிஸ்தான் சர்வதேச நிதி மையத்தில் 600 கோடி டாலரை கடன் வாங்க முயன்ற பொழுது IMF கடனளிக்க தயக்கம் காட்டியது. மேலும் பிரான்சில் உள்ள நிதிக் கட்டுப்பாட்டு மையமானது கருப்பு பட்டியலில் பாகிஸ்தானை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் உலக நாடுகளின் நிதி உதவி கிடைக்காமல் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை அங்கு உருவாகியுள்ளது. இதனை சரிசெய்யவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பணம் திரட்டும் வகையில் அந்நாட்டு பிரதமர் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அதனால் “பிரதமர் பங்களாவை சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தலாம்”. அதாவது வாடகைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களாவில் தான் பிரதமரின் ராணுவ செயலாளரான வாசிம் இப்திகாரி மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் பிரதமரும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் “ஆளுநர் மற்றும் முக்கிய அதிகாரிகளின் பங்களாகளும் வாடகைக்கு விடப்பட்டு அவர்கள் அனைவரும் சாதாரண வீடுகளில் தான் வசிப்பார்கள் எனவும் இதனால் மீதமாகும் பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள அவரின் பங்களாவை காலி செய்து மூன்று அறைகள் உள்ள வீட்டில் குடியேறி உள்ளார். இந்த திட்டங்களானது நாட்டின் நிதி நிலைமையை சரிசெய்யவே எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் உரிய வரியை செலுத்தாததே நாட்டின் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்றும் கருதப்படுகிறது