நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், அங்கிருந்து வருவோர் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார். போலி சான்றிதழ்கள் மூலம் நுழைய முயற்சி செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் மாஸ்க் அணிந்து பாதுகாப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.