Categories
உலக செய்திகள்

இனிமேல் இப்படி பயன்படுத்தலாம்….. ஐபோனில் அசத்தலான செயலிகள்…. தகவல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்….!!

செயலிகளில் புதிய வசதிகளை அமைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

உலக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது மறைந்து ‘போன் இன்றி அமையாது உலகு’ என்ற நிலைமை உருவாகிவிட்டது. இந்த நிலையில் புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில் ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் மேப் என்ற செயலி அனைவருக்கும் உதவி புரிந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதில் மேலும் சில புதிய வசதிகளை கூகுள் நிறுவனம் அமைத்துள்ளது.

அதில் ஒன்று ‘டார்க் மூடு’ என்னும் அமைப்பு இதனால் இரவு நேரங்களில் வெளிச்சமானது குறைந்து காணப்படும். இதன் நோக்கமானது பயணத்தின் போது செல்போனில் பேட்டரி சேமிப்பையும் கண்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதாகும். இந்த ஆண்டு துவக்கத்தில் ஆண்ட்ராய்டு கருவிகளில் ‘டார்க் மூடு’ வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி இனி வரப்போகும் ஐபோன் ஐஓஸ் 13லும் இதனை விட மேம்பட்ட திறன்  கொண்ட செயலியானது வரவுள்ளது.

இதில் ‘மெசேஜ் இண்டக்ரேஷன்’ என்ற வசதியும் உள்ளது. இதனால் நாம் போகும் இடத்தை ஒருவருக்கு சரியாக பகிர முடியும். மேலும் அந்த தகவலை 3 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியானது பயண நெரிசல் உள்ள இடங்களையும் தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் அளித்த தகவலில் “கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கலாம். இல்லையெனில் கூகுள் மேப்ஸ் செயலியில் டார்க் மூட் வரும் வாரத்தில் அறிமுகம் ஆகும் என்பதால் அதிலேயே தேர்வு செய்யலாம்” என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |