Categories
உலக செய்திகள்

“பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு தடை விதிக்க வேண்டும்”… உலக சுகாதார அமைப்பு கோரிக்கை..!!

உலக சுகாதார அமைப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200 உலகநாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில் பல நாடுகளிலும் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு போடப்படுவதுடன் தடுப்பூசிகள் ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணக்கார நாடுகளும் தடுப்பூசி உற்பத்தி நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போட்டதற்கு பிறகு பூஸ்டர் டோஸையும் போட ஆசைப்படுகின்றனர்.

ஆனால் பெரும்பாலான மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி கூட இன்னும் போடப்படவில்லை. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் முதலில் தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் 10 சதவீதம் பேருக்காவது முதல் டோஸ் தடுப்பூசி கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும். எனவே இந்த பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டு கொண்டவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி நல்ல பலனைத் தருமா என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் உலக சுகாதார அமைப்பு பணக்கார நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பதனை உறுதி செய்வதற்கு அதிகமாக உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |