மலேசியா நாட்டு பிரதமரின் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ள செய்தியானது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய நாட்டின் பிரதமராக இருப்பவர் முகைதீன் யாசின் ஆவார். இவர் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு என்னும் கூட்டணி கட்சியின் ஆதரவில் ஆட்சி செய்து வருகிறார். இதனையடுத்து அக்கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்து வந்த நிலையில் அதனை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பிரதமரின் பதவிக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. தற்பொழுது முகைதீன் யாசின் பெரும்பான்மையை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.
மேலும் அவர் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதில் “நான் பதவி விலகப் போவதில்லை. அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிலும் கொரோனா காலகட்டங்களில் அவர் கையாண்ட விதத்தினை கண்டு மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் யாசினுக்கு புதிய சிக்கல் ஒன்று மீண்டும் எழுந்துள்ளது. இந்த செய்தியானது அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.