சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ரெட்மி நிறுவனம் புதியதாக 8ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, டாட் நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 மற்றும் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா,
8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் கைரேகை சென்சாருக்கு மாற்றாக ஃபேஸ் அன்லாக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பேக் மற்றும் அரோரா வேவ் க்ரிப் வடிவமைப்பு கொண்டிருக்கும் ரெட்மி 8ஏ P2i கோட்டிங், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் சன்செட் ரெட் நிறங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,499 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,999 என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் வலைத்தளங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.