மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுப்புச்சாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவர் முத்தூருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பொன்னாபுரம் பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது சிவகுப்புச்சாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் சிவகுப்புச்சாமிக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் சிவகுப்புச்சாமியை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிவகுப்புச்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.