சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய் பீம் படத்தில் சூர்யா பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரெஜாஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Get ready to fight against injustice! Watch #JaiBhimOnPrime this November. @PrimeVideoIN#Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol @PoornimaRamasw1 pic.twitter.com/gW50GBRCkg
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 5, 2021
2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார். இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் சூர்யாவின் சூரரைப்போற்று படமும் அமேசான் பிரைமில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .