அமெரிக்காவில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் 70 சதவீத பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் 70 சதவீத பெரியவர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் லூசியானா மாகாணத்தில் பொது உள்ளரங்குகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் என அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.