டெக்னோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா, வி.ஜி.ஏ. கேமரா மற்றும் முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன், 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 8,999 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.