Categories
உலக செய்திகள்

கிரீன் டிராவல் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகள்… பிரித்தானியா முக்கிய அறிவிப்பு..!!

ஜெர்மனி உட்பட புதிதாக 7 நாடுகள் பிரித்தானியாவின் கிரீன் டிராவல் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரியா, ஜெர்மனி, லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, நோர்வே, ருமேனியா உள்ளிட்ட 7 நாடுகள் பிரித்தானியாவின் அம்பர் பயண பட்டியலில் இருந்து தனிமைப்படுத்துதல் இல்லாத க்ரீன் டிராவல் லிஸ்ட் வகைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி அதிகாலை 4 மணி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அம்பர் பயணப் பட்டியலில் இருக்கும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறியுள்ளது.

அம்பர் பட்டியலில் இருக்கும் நாடுகள் பிரித்தானியாவுக்கு வந்தவுடன் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். அதன்பிறகு இரண்டு நாட்களில் ஒரு சோதனையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கிடையே சிகப்பு பயண பட்டியலிலிருந்து அம்பர் பட்டியலுக்கு பக்ரைன், இந்தியா ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகள் மாற்றப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கிரீன் டிராவல் லிஸ்டில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் வைக்கப்படும் நாடுகள்

பிரித்தானியாவின் (பச்சை கண்காணிப்பு பட்டியல்) :

1.அங்குவில்லா
2.அண்டார்டிகா/பிரிட்டிஷ் அண்டார்டிக் பிரதேசம்
3.ஆன்டிகுவா மற்றும் பார்புடா
4.பார்படோஸ்
5.பெர்முடா
6.பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிரதேசம்
7.கெய்மன் தீவுகள்
8.குரோஷியா
9.டொமினிகா
10.கிரெனடா
11.இஸ்ரேல் மட்டும் ஜெருசலேம்
12.மடீரா (போர்ச்சுகலின் பிரதான நிலப்பகுதி மற்றும் அசோர்ஸ் அம்பர் பட்டியலில் உள்ளன)
13.மான்செராட் பிட்காயின், ஹெண்டர்சன், டூசி மற்றும் ஓனோ தீவுகள்
14.தைவான்
16.துருக்கி மற்றும் கைகோஸ் தீவுகள்

பிரித்தானியாவின் (பச்சை பட்டியல்) :

1.ஆஸ்திரேலியா
2.ஆஸ்திரியா
3.பல்கேரியா
4.பால்க்லேண்ட் தீவுகள்
5.ஃபாரோ தீவுகள்
6.ஜெர்மனி
7.ஜிப்ரால்டர்
8.ஹாங்காங்
9.ஐஸ்லாந்து
10.லாட்வியா
11.மால்டா
12.நியூஸிலாந்து
13.நோர்வே
14.ருமேனியா
15.சிங்கப்பூர்
16.ஸ்லோவாக்கியா
17.ஸ்லோவேனியா
18.தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்
19.செயின்ட் ஹெலினா, அஷென்சன் மற்றும் டிரிஸ்டன் டா குன்ஹா.

Categories

Tech |