Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் டூ படித்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணை கே.என். கார்டன் பகுதியில் மாகாளிதாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மகள் உள்ளார். தற்போது லதா பிளஸ் டூ முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து லதா வீட்டில் இருக்கும் சமயத்தில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் அவரது பெற்றோர் ஏற்கனவே கண்டித்துள்ளனர். இந்நிலையில் மாகாளிதாஸ்  லதா வீட்டு வேலைகளை செய்யாமல் செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததால் அவரை திட்டியுள்ளார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான லதா திடீரென்று வீட்டின் கதவை பூட்டிவிட்டு மண்ணெண்ணையை எடுத்து உடலின் மேல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனையடுத்து லதாவின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி உள்ளார்.

அதன்பின் லதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தீ வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் லதாவை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லதா பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவலறிந்த திருப்பூர் காவல்துறையினர் லதாவின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |