Categories
உலக செய்திகள்

புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகள்…. விரைவில் பிரித்தானியாவில் அமல்…. தகவல் வெளியிட்ட போக்குவரத்து செயலாளர்….!!

புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியா நாட்டிற்கு வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அந்நாட்டு போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகளானது வரும் 8 ஆம் தேதி முதல் காலை 4  மணியளவில் அமலுக்கு வருகிறது. இதில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரான்ஸ் நாட்டு பயணிகள் பிரித்தானியாவிற்கு வரும் பொழுது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா, ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகள் பச்சைநிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முதலிய நாடுகள் சிவப்புநிற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு அம்பர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பிரித்தானியா மக்கள் சுற்றுலா செல்லும் ஸ்பெயின் சிவப்புநிற பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நிலையில் இது குறித்து ஸ்பெயின் நாட்டு போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் “ஸ்பெயின் நாடானது அம்பர் பட்டியலில் தான் இருக்கும். ஆனால் அங்கிருந்து வரும் பயணிகள் PCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |