ஜெர்மனியை சேர்ந்த ஓய்வு பெற்ற புரோக்கர் ஒருவருக்கு 200,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள Heikendorf என்ற பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற புரோக்கரான Klaus-Dieter Flick ( 84 ) தனது வீட்டில் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் பீரங்கி ஒன்றையும், இரண்டாம் உலகப்போர் கால டேங்க் ஒன்றையும், ஏராளமான ஆயுதங்களையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் Flick கடந்த 1970-ஆம் ஆண்டு அந்த ஆயுதங்களை தான் பிரித்தானியாவில் வாங்கியதாக நீதிபதியிடம் கூறியுள்ளார்.
இருப்பினும் அவர் போர்கால ஆயுதங்கள் கட்டுப்பாடு சட்டத்தை மீறியதால் அவருக்கு 213,000 பவுண்டுகள் அபராதமும், 14 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த போர்க்கால ஆயுதங்களை சுமார் 20 ராணுவ வீரர்கள் சேர்ந்து Flick வீட்டிலிருந்து அகற்றும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.