தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு சார்பாக பல வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்னண் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் கல்விப்பணியில் எவ்வித புகாருக்கும் இடம் தராமல் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா காலத்தில் கற்பித்தல் பணி மேற்கொள்ளாத ஆசிரியர்கள் விருது பெற தகுதியானவர்கள் இல்லை என்றும் அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.