Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட தேசிய புவியியல் ஆய்வு மையம்….!!

ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரின் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

Categories

Tech |