Categories
டெக்னாலஜி பல்சுவை

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!!

எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

எல்.ஜி. நிறுவனம் புதியதாக கியூ6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த  புதிய கியூ60 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஹெச்.டி. பிளஸ் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, மூன்று பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Image result for எல்.ஜி. நிறுவனம்  கியூ6 ஸ்மார்ட்போன்

 

மேலும், இதனுடன் டி.டி.எஸ். எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் மற்றும் கேமிங், திரைப்படம் மற்றும் பாடல்களை கேட்கும் போது 7.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது. இந்த எல்.ஜி. கியூ60 ஸ்மார்ட்போனில் MIL-STD-810G தரச்சான்று, வித்ஸ்டான்டு இம்பேக்ட், வைப்ரேஷன், ஹை டெம்பரேச்சர், லோ டெம்பரேச்சர், தெர்மல் ஷாக் மற்றும் ஹியுமிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

Image result for எல்.ஜி. நிறுவனம் புதியதாக கியூ6 ஸ்மார்ட்போனை

இதன் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எல்.ஜி. கியூ60 ஸ்மார்ட்போனில் பிர்தயேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.மேலும், இந்தியாவில் இதன் விலை ரூ. 13,490 என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த  ஸ்மார்ட்போன் விற்பனை அக்டோபர் 1 ஆம் தேதி துவங்க உள்ளது.

 

Categories

Tech |