Categories
தேசிய செய்திகள்

குழந்தை பாக்கியம் கொடுப்பதாக…. பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி…. கணவரே வீடியோ எடுத்த அவலம்…!!!

மத்திய பிரதேசம் போபாலில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் இவர்கள் குழந்தை வரம் வேண்டி பல கோயில்களுக்கும் சென்று வேண்டியுள்ளனர். இந்நிலையில் அந்தக் கணவர் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதியை நாடியுள்ளார். ஆனால் அந்த மந்திரவாதி நள்ளிரவு நேரத்தில் அவருடைய மனைவியை அழைத்து வரச்சொல்லி அவரோடு தான் உறவு வைத்துக்கொண்டால் மலட்டுத்தன்மை நீங்கி விடும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்த கணவரும் தன்னுடைய மனைவியை நள்ளிரவில் அழைத்து வந்துள்ளார். பின்னர்  மந்திரவாதியும் அந்த பெண்ணுடன் உறவு வைத்துள்ளார். இதை அந்த பெண்ணின் கணவரே வீடியோவாக எடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தனக்கு நடந்த கொடுமையை அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி புலம்பியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்தப் பெண்ணை கூட்டி சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |