Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை…. நான் இந்த தடுப்பூசி தான் போட்டுக்கொண்டேன்…. அறிவிப்பு வெளியிட்ட ஜனாதிபதி….!!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தான் போட்டுக்கொண்ட தடுப்பூசி பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து உணர்த்தி தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் விளக்கம் அளித்து வருகிறார

இந்நிலையில் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தான் எந்த தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்பது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் தான் கடந்த மே 31ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் எனக்கு தடுப்பூசியால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |