Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேமரா BEAST … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை   அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

Image result for சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்

இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8 அப்ரேச்சர், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் பிரத்யேக பேட்டன் மற்றும் ஹாலோகிராஃபிக் எஃபெக்ட் மற்றும்  4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

Image result for சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்

மேலும், சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் ரெட், ப்ரிசம் கிரஷ் வைட் மற்றும் ப்ரிசம் கிரஷ் பிளாக் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 28,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 30,999 என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

Categories

Tech |