தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதிய இலவச பயண அட்டையை அச்சிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், இதன் கால அளவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிறுவனங்கள் கடந்த 19ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.