Categories
சினிமா

நடிகர் தனுஷுக்கு 48 மணி நேரம் கெடு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள். ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள் என்று நடிகர் தனுஷூக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் யார் வழக்கு தொடர்ந்தாலும் தான் யார்? என்ன தொழில் செய்பவர் என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும். தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நீதிபதி இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.எம்.சுப்புரமணியம், இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியாக சுமார் ரூ.30.30 லட்சம் செலுத்த நடிகர் தனுஷுக்கு உத்தரவிட்டார். மேலும், அந்த நுழைவு வரி பாக்கியை அடுத்த 48 மணிநேரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கெடு விதித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |