டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான 57 கிலோ ப்ரீஸ்டைல் எடை பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா , நடப்பு உலக சாம்பியனான ரஷ்யாவை சேர்ந்த ஜாவூர் உகுவேவை எதிர்கொண்டார். இதில் ரஷ்ய வீரரின் உடும்பு பிடியில் சிக்கியதால் ரவிக்குமார் தாஹியா புள்ளிகளை இழந்தார் .இதன் பிறகு சுதாரித்துக்கொண்ட ரவிக்குமார் தாஹியா கடுமையாக முயற்சி செய்தார்.
ஆனால் ரஷ்ய வீரர் சாமர்த்தியமாக ரவிக்குமார் தாஹியாவின் பிடியில் சிக்காமல் நழுவியதால் கூடுதல் புள்ளிகளை பெற்றார். இறுதியாக 4-7 என்ற புள்ளி கணக்கில் ரவிக்குமார் தாஹியா தோல்வியை தழுவினார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது .இதன் மூலம் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளது.