VJ அஞ்சனா தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டு வருகிறது .
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து பிரபலமான தொகுப்பாளினி அஞ்சனா நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்த அஞ்சனா தற்போது மீண்டும் ஜீ தமிழ் மற்றும் புதுயுகம் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையே அஞ்சனா போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அஞ்சனா தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் போட்டோ ஷூட் நடத்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கும் ரசிகர்கள் பலரும் அஞ்சனாவை இடையழகி சிம்ரன் மாதிரியே இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.