தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடுவது குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.