ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து தான் அதன் தெலுங்கு ரீமேக்கையும் இயக்குகிறார். இந்நிலையில் தமிழில் விஜய் சேதுபதி நடித்த கௌரவ கதாபாத்திரத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.