Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக் ஆகும் ஹிட் படம்.. விஜய் சேதுபதி வேடத்தில் அல்லு அர்ஜுன்..!!

தமிழில் கடந்த 2020-ஆம் வருடத்தில் வெளியான, ஓ மை கடவுளே திரைப்படம் தெலுங்கில் மறு உருவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் மற்ற மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அந்தவகையில் கடந்த 2020 ஆம் வருடத்தில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தை, அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இதில் அசோக்செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். தற்போது, இத்திரைப்படத்தை, தெலுங்கில் பிவிபி சினிமாஸ் மற்றும் வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் இணைந்து மறுஉருவாக்கம் செய்ய இருக்கிறார்கள்.

தமிழில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில், தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |