தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடற்கரை பகுதிகளுக்கும், கோவில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை தனுஷ்கோடி, அரிச்சல்முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.