Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு” இத்தனை நாள் ஆகிவிட்டதா….? WHO கூறும் அறிவுரை….!!

அதிக நாட்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.

உலக நாடுகள் முழுவதிலும் சுமார் 20 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பலர் குணமடைந்துவிட்டார்கள். எனினும் சிலருக்கு அதிக நாட்கள் கொரோனா தொற்று இருந்துள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார மையத்தின், தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வான் கெர்க்கோவ் தெரிவித்துள்ளதாவது, இவ்வாறான பாதிப்பு உடையவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டும். எனினும் எத்தனை நாட்களில் குணமடையும் என்று தெரியாது. தற்போது இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |