ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரே நாளில் பல இடங்களில் ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டதில் தலீபான்கள் 303 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசபடை மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கிடையே நீண்ட நாட்களாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் தலிபான் தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி, பொது மக்கள் பலரை கொன்று குவித்தார்கள். எனவே தலிபான்களை அழிப்பதற்காக ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.
இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தினர் நேற்று அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் தலிபான் தீவிரவாதிகள் அமைப்பின் 303 நபர்கள் உயிரிழந்ததோடு, 125 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.