நாடு முழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் தேவஸ்தானம் சார்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அணிவிக்கவில்லையென்றால் பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் அபராதம் அல்லது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.