Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இத்தனை பாடல்களா?… வெளியான புதிய தகவல்…!!!

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் அமைந்துள்ளது. இதில் இளங்கோ கிருஷ்ணன்- 8 பாடல்களையும், கபிலன்- 2 பாடல்களையும், வைரமுத்து- 1 பாடலையும், வெண்பா கீதையன்- 1 பாடலையும் எழுதியுள்ளனர். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |