சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் 900 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக ரோஜா சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது . இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும், சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரோஜா சீரியல் வெற்றிகரமாக 900 எபிசோடுகளை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.