பிரபல சீரியல் நடிகர் ஆர்யன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆர்யன். கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்யனிடம் ரசிகை ஒருவர் நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டுள்ளார். இதற்கு ஆர்யன் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவை டேக் செய்து ‘இவங்களுக்கு என்ன சொல்லட்டும்’ எனக் கேட்டார். இதற்கு ஷபானா மைன் (அவர் என்னுடையவர்) என பதிவிட்டிருந்தார். இதிலிருந்து ஆர்யன்- ஷபானா இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
இந்நிலையில் ஆர்யன் இரு கைகளில் மோதிரம் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘அவளுடைய ஆன்மாவில் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஒரு நாள் எங்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி குறையும் . வெளிப்புற அழகும் குறைந்து விடும். ஆனால் ஆன்மாவுக்கு வயதில்லை. அது வாழ்ந்து கொண்டிருக்கும். அதுதான் அன்பு வாழும் இடம்’ என பதிவிட்டுள்ளார். இதனால் ஆர்யன்- ஷபானாவுக்கு நிச்சயமாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.