மணல் கடத்திய 2 டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புள்ளூர் கிராமத்தில் இருக்கும் கண்மாயில் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சப் – இன்ஸ்பெக்டரான ஜெயலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது ஜே.சி.பி இயந்திரம் மூலம் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அப்போது அங்கிருந்த சிலர் காவல் துறையினரிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் 2 – பேரை மட்டும் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் இரண்டு பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் வெள்ளாங்குளம் பகுதியில் வசிக்கும் மாரிசாமி மற்றும் தொடுவம்படி பகுதியில் வசிக்கும் அய்யனார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த இரண்டு டிராக்டர் மற்றும் ஜேசிபி எந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.