மலையாள சினிமாவில் பிரபல நடிகரான மம்முட்டி 21 ஆண்டுகளாக தனது அறுவை சிகிச்சையைத் தள்ளி போட்டு நடிப்பில் ஆர்வம் காட்டுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகரான மம்முட்டி ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது மம்முட்டி தனது மகன் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள “புழு” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அண்மையில் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசிய அவர் “தனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்று ஏற்பட்டதாகவும், அதில் தனது இடது கால் தசைநார் சேதம் அடைந்து விட்டதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவர்கள் அதனை அறுவை சிகிச்சை செய்தால் தங்களது காலின் நீளம் குறைந்துவிடும் என்று கூறியதையும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரோ காலின் நீளம் குட்டையானால் படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறைந்துவிடும் என்பதால் அந்த அறுவை சிகிச்சையை தள்ளி போட்டுள்ளார். மேலும் நடிகர் மம்முட்டி சுமார் 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சையை தள்ளி போட்டு, இத்தனை வருடங்கள் வலியோடு நடித்திருக்கிறார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.