வெடி உப்பு மூட்டையை பதுக்கி வைத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிவகாமிபுரம் பகுதியில் காவல் துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மகாராஜன் என்பவர் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் வெடி உப்பு மூட்டைகளை அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து 50 கிலோ எடையுள்ள 58 வெடி உப்பு மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகாராஜனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.