Categories
தேசிய செய்திகள்

ALERT: கேஸ் சிலிண்டர்…. வெளியான பரபரப்பு செய்தி…. மக்களே உஷாரா இருங்க….!!!!

கடந்த சில நாட்களாக பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிக்கும் முயற்சியில் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது.அதனால் மக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றது. இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவி மற்றும் சிலிண்டரின் எடை அழுத்தத்தை கண்டறிவதற்கான கருவியை பொருத்தி தருவதாக கூறி போலி கருவிகளைப் பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Categories

Tech |