Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 19 வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளில் கணக்கிடப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது.இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்று கருதும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வெழுதலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு இன்று  முதல் 19ம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் 10-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் இது பற்றிய விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |